இந்தியாவின் பழமையான மற்றும் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்.
இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்புகள், முதுநிலை படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள், நேரடியாகவும், தொலைதூரம், மற்றும் ஆன்லைன் மூலமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா தொற்றால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் புதிதாக 20 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளோமா படிப்புகளை ஆன்லைன் மற்றும் தொலைதூர கற்றல் முறை மூலம் தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆன்லைன் அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவே இந்த படிப்புகளை முடிக்க முடியும். இது கூடுதலாக சான்றிதழ் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கு உகந்தது.
மேலும் மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை அதிகரிக்கவே இந்த தொலைதூர, ஆன்லைன் கல்வியில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
20 புதிய பாடத்திட்டங்கள்:
சமூக அறிவியல்,
கிறிஸ்தவ வேதாகமம் மற்றும் விளக்கம்,
இந்திய கிறிஸ்தவம்,
அறிவுசார் சொத்துரிமை,
கர்நாடக இசை,
குரல் பயிற்சி,
சந்தைப்படுத்தல் மேலாண்மை,
நிதி மேலாண்மை,
மனித வள மேலாண்மை,
மருத்துவமனை மேலாண்மை
சைவ சித்தாந்தம்
தொல்பொருளியல் மற்றும்
பெரிய புராண ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமா.
போன்ற பாடப்பிரிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஆன்லைன் மற்றும் தொலைதூர வழி கற்றலுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.