/tamil-ie/media/media_files/uploads/2023/03/Madras-University.jpg)
சென்னை பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
அலுவலக பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 15,000
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/webportal/uploads/appointments/c3oaos_20230817121252_7579.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Registrar, University of Madras, Chepauk, Chennai 600 005
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.unom.ac.in/webportal/uploads/appointments/c3oaos_20230817121252_7579.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.