/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-44.jpg)
Madras University Results 2018 for UG and PG-சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்
Madras University UG,PG Results Likely to Declare: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் பிப்ரவரி 4-ம் தேதி இரவு வெளியாகும் என கூறப்பட்டதால் மாணவ, மாணவிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகம், தமிழகத்தில் பழமையான ஒரு பல்கலைக்கழகம். சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் நேரடியாக பயில்வோர் தவிர, இதன் இணைப்புக் கல்லூரிகளில் பயில்வோருக்கும் இந்தப் பல்கலைக்கழகமே பட்டம் வழங்குகிறது.
ஆண்டுக்கு இரு செமஸ்டர் தேர்வுகளை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் நடத்துகிறது. மார்ச்/ஏப்ரலில் 2,4,6 என இரட்டைப் படை வரிசை கொண்ட செமஸ்டர் தேர்வுகளையும், நவம்பரில் 1,3,5 என ஒற்றைப்படை எண் கொண்ட செமஸ்டர் தேர்வுகளையும் நடத்துகின்றன.
அதன்படி சென்னை பல்கலைக்கழகத்திலும் நவம்பர் 2018-ல் ஒற்றைப்படை எண் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இளநிலை முதுநிலை வகுப்புகளுக்கான அந்தத் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது? என இன்று (பிப்ரவரி 4) மாலையில் பல்கலைக்கழக அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது அவர்கள், ‘தேர்தல் முடிவுகள் தயார் நிலையில் இருக்கின்றன. நிர்வாக ரீதியிலான வேறு காரணங்கள் ஏதும் இல்லாதபட்சத்தில் இன்று (4-ம் தேதி) இரவு 9 மணி வாக்கில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்’ என்றார்கள்.
Madras university results: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, மாணவர்கள் எதிர்பார்ப்பு
தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளங்களான unom.ac.in , @results.unomac.in ஆகியவற்றில் காணலாம். மாணவர்கள் பலர் ஒரே நேரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்க முட்டி மோதுவதால் இணையதளம் முடங்கியது. எனினும் விரைவில் அது சரி செய்யப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக இணையதள இணைப்பு இங்கு தரப்படுகிறது. இங்கே, ‘க்ளிக்’ செய்தால் பல்கலைக்கழக முகவரிக்கு செல்ல முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.