/tamil-ie/media/media_files/uploads/2020/10/madras-university.jpg)
Madras University Results 2020: சென்னை பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். தேர்வு முடிவுகள் வெளியானதும், மொத்தமாக மாணவர்கள் ரிசல்டை பார்க்க முனைவதால், இணையதளத்தை திறப்பதில் சிரமம் இருக்கலாம். அவசரமின்றி மாணவர்கள் தங்கள் முடிவை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வுகளை மட்டும் தமிழக பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் நடத்தின. அந்த அடிப்படையில் சென்னை பல்கலைக்கழகமும் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியது.
தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இன்று (அக்டோபர் 14) மாலை 6 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக இணையதளமான @unom.ac.in -ல் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மொத்தமாக மாணவர்கள் ரிசல்டை பார்க்க முனைவதால், இணையதளத்தை திறப்பதில் சிரமம் இருக்கலாம். அவசரமின்றி மாணவர்கள் தங்கள் முடிவை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.