உடனடி வேலைவாய்ப்பைத் தரும் ஆன்லைன் கோர்ஸ்: சென்னை பல்கலைக்கழகம் திட்டம்

Madras University Job Oriented Courses : டேலி பயன்பாட்டு மென்பொருள் படிப்பை மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கலகம் அறிமுகப்படுத்தவுள்ளது

By: February 13, 2021, 8:21:51 PM

Madras University Job Oriented Courses: வேலைவாய்ப்புகளை பெருமளவு உருவாக்கும் விதமாக , 2021-22 கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு  ஆன்லைன் சான்றிதழ் / டிப்ளமோ / உயர்நிலை சான்றிதழ் படிப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கலகம் திட்டமிட்டுள்ளது.

கோவிட் -19 க்கு பிந்தைய சூழ்நிலைக்கான திட்டமிடலில்,  ஆன்லைன் வழிக் கல்வி முறையை சென்னை பலகலைக்கலகம் முன்னிலைப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, பெரும் தரவு மதிப்பீடு, இயந்திரம் கற்றல், வணிக பகுப்பாய்வு, சைபர் தடயவியல், உளவியல் போன்ற படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவின் படி, மாணவர்கள் ஒரே நேரத்தில் நேரடி கல்வி மூலமாகவும், தொலை தூரக் கல்வி மூலமாகவும் இருவேறு படிப்புகளைத் தொடர முடியும். பல்கலைக்கழகத்தின் வருவாயை அதிகரிப்பதோடு, மாணவர்களின் வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வர்த்தகத்தில் இளம் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் டேலி பயன்பாட்டு மென்பொருள் படிப்பை மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கலகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும், பொருளாதாரம், சட்டம், உளவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆன்லைன் டிப்ளோமா படிப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கழகம், கல்வி தொடர்புக்கான யுஜிசி கூட்டமைப்பின்  (சிஇசி) கீழ் ஒப்பந்தம் செய்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Madras university to introduced job oriented online degree diploma certified courses

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X