செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது? சென்னை பல்கலை. அறிவிப்பு

செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னைப் பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Madras university UG PG semester exam 2022 official result published: இளங்கலை மற்றும் முதுகலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி https://www.unom.ac.in/ என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதையும் படியுங்கள்: திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை https://www.unom.ac.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ரூ. 300க்கு வரைவு காசோலையினை The Registrar University of Madras என்ற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்

Advertisment
Advertisements

6-வது செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். இதேபோல், முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும்.

இவர்கள் தாங்கள் பயின்று வந்த கல்லூரி வாயிலாக செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை https://www.unom.ac.in/ என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் உடனடி தேர்வுக்கான கட்டணமாக 300 ரூபாயும், முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும், எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madras University

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: