சென்னை பல்கலைகழக கல்லூரிகளில் 30 சதவீத தகுதியில்லாத பேராசிரியர்கள்

சென்னை பல்கலைகழத்தின் கட்டுப்பாட்டிலான 90 கல்லூரிகளில் பணியாற்றும் 30 சதவீத பேராசிரியர்கள், UGC பரிந்துரைத்த தகுதிகளை பெறாதாவர்களாக உள்ளனர்

By: Updated: June 11, 2019, 03:24:44 PM

சென்னை பல்கலைகழத்தின் கட்டுப்பாட்டிலான 90 கல்லூரிகளில் பணியாற்றும் 30 சதவீத பேராசிரியர்கள், பல்கலைகழக மானிய குழு ( University Grants Commission (UGC)) பரிந்துரைத்த தகுதிகளை பெறாதாவர்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேராசிரியர்கள், தேசிய தகுதித்தேர்வு ( NET) அல்லது மாநில அளவிலான தகுதித்தேர்வை ( SET) நிறைவு செய்தால் தான், அவர்கள் அப்பணியை தொடரமுடியும் என்று பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், பல்கலைகழகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியப்பணியாற்றும் Facultyகளின் கல்வி விபரங்கைள சரிபார்த்து உறுதிசெய்ய உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக, பல்கலைகழகம், கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது. பல்கலைகழகம் சார்ந்த கல்லூரிகளில் பணியாற்றும் 8,500 faculty memberகளில், 2,500 பேர் யுஜிசி வரையறுத்துள்ள கல்வித்தகுதிகளை பெறாதவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக, சென்னை பல்கலைகழக துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் பணியாற்றும் faculty memberகளில், யார் யுஜிசி வகுத்த கல்வித்தகுதி பெற்றவர்களை கண்டறிய முடிவதில்லை என்று அக்கல்லூரிகளின் முதல்வர்கள் சொன்ன காரணங்களினால், கல்லூரிகளில் பணியாற்றும் யுஜிசி வரையறுத்த கல்வித்தகுதி பெற்ற faculty memberகளை அறிந்துகொள்ள வெப் போர்டல், பல்கலைகழகத்தின் சார்பில் துவங்கப்பட்டுள்ளது. இந்த வெப் போர்டலில், கடந்த சில நாட்களில் மட்டும் 800 பேர் பதிவு செய்துள்ளதாக துணைவேந்தர் துரைசாமி கூறினார்.

மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் தரும் கல்லூரிகள்….

யுஜிசி விதிகளின்படி, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற விண்ணப்பிப்பவர்கள் முதுகலை படிப்பில் 55 சதவீதத்துடன் தேர்சசி பெற்றிருக்க வேண்டும் மற்றும் NET அல்லது SET தேர்வை நிறைவு செய்திருக்க வேண்டும். 2009ம் ஆண்டிற்கு முன் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர்கள், NET / SET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், சென்னனயின் சுற்றுப்புற பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில் முதுகலை படிப்பு மட்டுமே முடித்தவர்களை கொண்டு கல்லூரிகள் நடத்தப்படுவதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியின் ஆங்கிலத்துறையில் உள்ள 18 உதவி பேராசிரியர்களில் 3 பேர் மட்டுமே, யுஜிசி வரையறுத்த கல்வித்தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

காஞ்சிபுரம் கல்லூரியில் பணியாற்றிவரும் ஒரு உதவி பேராசிரியர் கூறுகையில், faculty memberகளுக்கு மாதம் ரூ. 7 ஆயிரம் தான் சம்பளமாக தருகின்றனர். இதில் காலேஜ் பஸ்க்கு என ரூ.500 உணவிற்கு என ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறார்கள். யுஜிசி வரையறுத்த கல்வித்தகுதி பெற்றவர்கள், இத்தகைய குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருவதில்லை என குறிப்பிட்டார்.
போதிய கல்வித்தகுதி இல்லாத faculty memberகள் உள்ள கல்லூரிகளுக்கு, பல்கலைகழகம் அனுமதி தருவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று சிண்டிகேட் உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், புள்ளியியல் மற்றும் விசுவல் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு தகுதிவாய்ந்த உதவி பேராசிரியர்கள் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளது.
NET/SLET தேர்வர்களின் சங்க ஆலோசகர் எஸ். சுவாமிநாதன் இதுதொடர்பாக கூறியதாவது, தற்போது NET/ SLET தேர்வு நிறைவு செய்தவர்களுக்கு ஏற்ப முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். ஆனால், அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைபார்க்க விரும்புவதில்லை.
யுஜிசி வரையறுத்த கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.65 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும் என்று விதியே உள்ளது. ஆனால், கல்லூரிகள் அதை பின்பற்றுவதில்லை என கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Madras university unqualified faculty members ugc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X