மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் 33 மாதங்களில் முடிக்கப்படும் என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் மருத்துவக் கல்லூரி மற்றும் 720 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டுவதற்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திடம் (AIIMS) ஆர்டரைப் பெற்றுள்ளதாக லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுமான பணிகளில் 720 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் தடுப்பு மையம், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பகுதி, 150 இருக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, 750 இருக்கைகள் கொண்ட அரங்கம், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் உள்ளன.
மொத்தம் 2.1 மில்லியன் சதுர அடியில் கட்டப்படும் இந்த திட்டம் 33 மாதங்களில் முடிக்கப்படும். ரூ.1,978 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் முன் கட்டுமானப் பணிகள் தோப்பூர் தளத்தில் வாஸ்து பூஜையுடன் தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“