/tamil-ie/media/media_files/uploads/2023/02/aavin-jobs.jpg)
ஆவின் வேலைவாய்ப்பு
மதுரை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Veterinary Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 11 (மதுரை – 3, திருப்பூர் - 8)
கல்வித் தகுதி : B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : 43,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 27.04.2023
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
மதுரை: O/o the General Manager, Madurai DCMPU Ltd., (Aavin) Madurai – 20.
திருப்பூர்: Tirupur DCMPU Ltd., (Aavin), The Aavin milk chilling center, Veerapandi Pirivu, Palladam road, Tirupur -641605.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/04/2023041033.pdf என்ற இணையதளப் பக்கம் மற்றும் கீழே உள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.