/tamil-ie/media/media_files/uploads/2017/11/tractor.jpg)
அரசு இயந்திர கலப்பை பணிமனையில் டிராக்டர் ஆப்ரேட்டர் பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது;
மதுரை மாவட்டம் நெல்லியேந்தல்பட்டியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.
பயிற்சி விவரங்கள்
மொத்தம் 3 பயிற்சி கட்டங்கள் (2024-25 கல்வியாண்டு) நடைபெறும். ஒவ்வொரு பயிற்சி கட்டமும் 22 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 25 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
பயிற்சி கால அட்டவணை
முதல் கட்டம்: 11.12.2024 - 11.01.2025
இரண்டாவது கட்டம்: 27.01.2025 - 28.02.2025
மூன்றாவது கட்டம்: மார்ச் 2025 முதல் வாரம்
தகுதிகள்
இந்தப் பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
கல்வித் தகுதி சான்று
புகைப்படம்
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட ஆவணங்களுடன் நெல்லியேந்தல்பட்டி அருகிலுள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனைக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவலுக்கு: 9443677046, 9944344066, 8428981436
பயிற்சி முடித்த பின்னர் ஓட்டுநர் உரிமம் பெற ஆவண ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.