மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 14.12.2024 சனிக்கிழமை அன்று மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, தல்லாகுளம், மதுரை -2 இல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். உள்ளுர் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இம்முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் (Bio-Data) ஆகியவற்றுடன் 14.12.2024- அன்று மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர் கோவில் ரோடு, தல்லாகுளம், மதுரை - 2 என்ற முகவரிக்கு சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நேரில் வரவும்.
மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022, வாயிலாக தொடர்பு கொள்ளவும்.
இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“