டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியில் தமிழ் வழியில் படித்து ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?

By: November 28, 2020, 10:01:41 AM

தொலைதூர கல்வியில் கற்று 20% இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் விபரங்களை தர தவறினால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் என, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நியமனத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தொலைநிலை கல்வியில் தமிழ் பயின்றவர்களை தவிர்த்து, கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றவர்களை மட்டும் கொண்டு குரூப் 1 நியமனத்தை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியில் தமிழ் வழியில் படித்து ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்று தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இகுறித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Madurai high court warned tnpsc reservation anti corruption department

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X