மதுரை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!
வழக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : சமூகப் பணி அல்லது உளவியல் ஆலோசனை இயலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பாளராக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
பல்நோக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 6,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை - 625020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/07/2023070653.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.