New Update
/indian-express-tamil/media/media_files/cSQdpDmoaZjjeatvGDNv.jpg)
மதுரை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
மதுரை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Protection Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health/ Community Resource Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 27,804
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,536
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2025/01/2025010923.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை - 625020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.