மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

Madurai Thiagarasar college invites application for various posts apply soon: மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Madurai Thiagarasar college invites application for various posts apply soon: மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

மதுரை தியாகராசர் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற, தியாகராசர் கல்லூரியில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 12 விதமான பதவிகளுக்கு மொத்தம் 32 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021

பதவிகளின் பெயர் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை

இளநிலை உதவியாளர் – 2

தட்டச்சர் – 1

ஆய்வுக்கூட உதவியாளர் – 7

பதிவறை எழுத்தர் – 2

நூலக உதவியாளர் – 2

அலுவலக உதவியாளர் – 4

பெருக்குபவர் – 6

காவலர் – 2

குடிநீர் கொணர்பவர் – 2

துப்புரவாளர் – 1

தோட்டக்காரர் – 2

குறியீட்டாளர் – 1

கல்வித் தகுதி : தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் உயர்கல்வியும் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழ்வழியில் பயின்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : பொதுப்பிரிவினர் -30, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் – 32, மற்றும் தாழ்த்தப்பட்டோர் – 35

Advertisment
Advertisements

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tcarts.in/recruitment/non_teaching.html என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

செயலர், தியாகராசர் கல்லூரி, காமராசர் சாலை, தெப்பக்குளம், மதுரை -9

ஒன்றிற்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: