அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி; விண்ணப்பிக்க அழைப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி; டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி; டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

author-image
WebDesk
New Update
TNSTC special buses 930 ready for puja holidays Tamil News

மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் (Apprentice) பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அந்த கழகத்தின் மேலாண் இயக்குநர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியியங்கியல், மின் மற்றும் மின்னணுயியல் பிரிவுகள்) அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வானவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தொழில் பழகுநர் பயிற்சி பெறுவார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் nats.education.gov.in என்ற தேசிய பயிற்சி திட்ட இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் அக்டோபர் 18 ஆகும்.

Advertisment
Advertisements

மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம், மாவட்டங்களின் இளைஞர்கள் தொழில்துறை திறன்களைப் பெறுவதற்கும், எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Jobs Tnstc Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: