புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பா.இரவிக்குமார், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை எல்.வித்யா அவர்களும் 2023 ஆம் ஆண்டுக்கான நிகரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பா.இரவிக்குமார், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை எல்.வித்யா அவர்களும் 2023 ஆம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் தொகுதி எம்.பி-யும் மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியருமான ரவிக்குமார், மணற்கேணி ஆய்விதழ் சார்பில், 2023-ம் ஆண்டுகான சிறந்த ஆசிரியர்களுக்கான நிகரி விருது அறிவித்துள்ளார்.
வகுப்பறையில் மாணவர்களை சாதிய, பாலின பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தோடு நடத்தும் கல்லூரி ஆசிரியர் ஒருவரையும், பள்ளி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளித்து சிறப்பித்து வருகிறோம்.
இந்த விருது 2013 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான விருதுபெறும் ஆசிரியர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பா.இரவிக்குமார், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை எல்.வித்யா அவர்களும் 2023 ஆம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகரி சமத்துவ ஆசிரியர் விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“