CBSE New Chairperson Appointed: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் புதிய தலைவராக மனோஜ் அஹுஜா நேற்று நியமிக்கப்பட்டார்.
Advertisment
தற்போதைய தலைவர் அனிதா கர்வால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அனிதா கர்வால், கடந்த இரண்டு ஆண்டுகள் சிபிஎஸ்சி தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisment
Advertisements
1990 ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அஹுஜா, முன்னதாக லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
பொது முடக்கநிலை காலத்தில் வாரியத் தேர்வுகளை முடிப்பதில் பெரும் சவாலை சிபிஎஸ்இ எதிர்கொண்டு வரும் நேரத்தில், அதன் தலைவராக மனோஜ் அஹுஜா பொறுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil