Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

அரசு வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலச் சங்கத்தில் உடலியக்க மருத்துவர், நுண்ணுயிரியலாளர், ஆய்வக நுட்புனர் மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 1000 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Bachelor of Physiotherapy (BPT)படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்

சம்பளம்: ரூ. 13,000

Microbiologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Medical Graduate with Post graduate degree/ Diploma (preferably in Microbiology, Virology, Pathology and other lab sciences) Or Medical Graduate with 2 years of experience in laboratory sciences Or M.sc in Medical Microbiology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 40,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

Lab Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/07/2023070514.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், 5 ஆம் நம்பர் புதுத் தெரு நல்லத்துக்குடி ரோடு, மயிலாடுதுறை மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/07/2023070546.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment