Advertisment

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

tn govt jobs

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலை; 78 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/12/2022120977.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம், மயிலாடுதுறை – 609001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/12/2022120977.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment