Advertisment

எம்.பி.பி.எஸ் அட்மிஷன்: அகில இந்திய கோட்டாவில் தமிழக மாணவர்கள் சேர்வது எப்படி? அரசு முக்கிய அறிவிப்பு

தமிழக மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவது எப்படி என்ற அரசின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS admission, BDS admission mbbs admission for all india quota govt important notice released, எம்.பி.பி.எஸ் அட்மிஷன், அகில இந்திய கோட்டாவில் தமிழக மாணவர்கள் சேர்வது எப்படி, அரசு முக்கிய அறிவிப்பு, MBBS admission, mbbs admission all india quota, govt important notice released

எம்.பி.பி.எஸ் அட்மிஷன்: அகில இந்திய கோட்டாவில் தமிழக மாணவர்கள் சேர்வது எப்படி? அரசு முக்கிய அறிவிப்பு

தமிழக மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவது எப்படி என்ற அரசின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் ஜூலை 22-ம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக, ஜூலை 20-ம் தேதி முதல், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும், இந்த கலந்தாய்வு தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

இதனிடையே, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதத்திற்கான இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 22-ம் தேதி முதல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment