அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கில் கலந்துக் கொள்பவர்களுக்கு அருமையான வாய்ப்பாக கூடுதலாக 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Advertisment
இந்த ஆண்டில் தற்போது புதிதாக 10 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்றில் கலந்துக் கொள்பவர்களுக்கு ஜாக்பாட்டாக 150 இடங்கள் கிடைக்கும் என மிஸ்பா கேரியர் அகாடமி வீடியோ வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 10 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 85% இடங்கள் போக, 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். அந்த வகையில் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். எனவே 3 ஆம் சுற்றில் கலந்துக் கொள்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“