Advertisment

2,182 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு சிறப்பு கவுன்சலிங்; விண்ணப்பப் பதிவு ஆரம்பம்

நாடு முழுவதும் காலியாக உள்ள 2,182 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கவுன்சலிங் தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

author-image
WebDesk
New Update
mbbs students

நாடு முழுவதும் காலியாக உள்ள 2,182 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கவுன்சலிங் தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான காலக்கெடு முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள இளங்கலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

அகில இந்திய ஒதுக்கீட்டில் 156 இடங்கள் உட்பட எம்.பி.பி.எஸ் படிப்புகளில் மட்டும் 2,182 இடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு விதிமுறைகளை மீறியதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தால் (NMC) சேர்க்கை செல்லாது என அறிவிக்கப்பட்ட இடங்களும் இந்த மொத்த காலியிடங்களில் அடங்கும்.

பொது நலன் கருதி 'விலைமதிப்பற்ற' மருத்துவ இடங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுக்க, சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்கக் கோரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்கக் கோரியும், சிறப்புச் சுற்றுக்காகவும் மாநில அரசுகள் மற்றும் மாணவர்களிடமிருந்து அமைச்சகம் நிறைய கோரிக்கைகளை பெற்றதன் அடிப்படையில் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செவ்வாயன்று, மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), மத்திய அரசின் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் கீழ், MBBS/ BDS/ BSc நர்சிங் இடங்கள் உட்பட காலியாக உள்ள அனைத்து இளங்கலைப் பட்டதாரி இடங்களையும் நிரப்ப ஒரு சிறப்பு பின்னடைவு காலியிடச் சுற்று கலந்தாய்வை நடத்துவதாக அறிவித்தது. அகில இந்திய மற்றும் மாநில ஒதுக்கீட்டில். அனைத்து சேர்க்கைகளையும் முடிப்பதற்கான புதிய காலக்கெடு நவம்பர் 15 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சில இடங்கள் விரும்பப்படும் அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ளன. எம்.பி.பி.எஸ் படிப்பில் மட்டும் 2,182 இடங்கள் காலியாக உள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) காலியாக உள்ள 2,182 MBBS/ BDS/ BSc நர்சிங் இடங்களை நிரப்பும் நோக்கில், NEET UG 2023 சிறப்பு பின்னடைவு காலியிட கவுன்சிலிங்கிற்கான பதிவைத் தொடங்கியுள்ளது. இந்தச் சுற்றில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mcc.nic.in/ இல் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுச் சாளரம் நவம்பர் 5 ஆம் தேதி வரை திறந்திருக்கும். நவம்பர் 1 முதல் 5 வரை, மாணவர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து முன்னுரிமையை வரிசைப்படுத்தலாம். NEET UG 2023 சிறப்பு பின்னடைவு காலியிட கவுன்சிலிங்கிற்கான இட ஒதுக்கீடு முடிவுகள் நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும்.

மாணவர்கள் நவம்பர் 8 முதல் 15 ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கைப் பெற வேண்டும். இந்தக் கலந்தாய்வில் ஏற்கனவே இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களை நீக்கிவிட்டு, மாநிலங்களின் சிறப்பு பின்னடைவு காலியிடங்களுக்கான கவுன்சிலிங்கை மாநில கவுன்சிலிங் குழு நிரப்பிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களின் விவரங்கள் MCC இணையதளத்தில் (https://mcc.nic.in/) உள்ளன. மாணவர்கள் காலியாக உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு அந்தந்த மாநில கவுன்சிலிங் இணையதளத்தை பார்வையிடவும்.

NEET UG கவுன்சிலிங் 2023: பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய முக்கிய படிகள்

https://mcc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

'பதிவு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உள்நுழைய உங்கள் NEET UG ரோல் எண், கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தவும்.

விண்ணப்ப படிவத்தை எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கவும்.

NEET UG கவுன்சிலிங் 2023: பின்வரும் ஆவணங்கள் தேவை

NEET UG அனுமதி அட்டை மற்றும் தரவரிசை அட்டை

மாணவரின் புகைப்படம்

மாணவரின் கையொப்பம்

பிறந்த தேதி சான்றிதழ் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்)

தகுதிச் சான்றிதழ் (12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது தேர்ச்சி சான்றிதழ்)

சாதிச் சான்றிதழ்

நடத்தைச் சான்றிதழ்

மருத்துவ தகுதி சான்றிதழ்

அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் ஐ.டி, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை)

சிறப்பு பின்னடைவு காலியிட சுற்றுக்கான முக்கிய புள்ளிகள்:

தகுதி:

அகில இந்திய ஒதுக்கீட்டில் அல்லது மாநில ஒதுக்கீட்டில் இதற்கு முன் சீட் ஒதுக்கீடு பெறாத விண்ணப்பதாரர்கள் சிறப்பு பின்னடைவு காலியிட சுற்றில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

MCC சுற்று-3 அல்லது அதற்குப் பிறகு சீட் ஒதுக்கப்பட்டு, அவற்றை ஏற்காத மாணவர்கள் பங்கேற்கத் தகுதியற்றவர்கள்.

எம்.சி.சி மூலம் இடங்களைப் பெறும் விண்ணப்பதாரர்கள் மாநில கவுன்சிலிங் மூலம் சேர்க்கை பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.

பாதுகாப்பு வைப்புத்தொகை:

சிறப்பு பின்னடைவு காலியிடச் சுற்றில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்காத மாணவர்களின் பாதுகாப்பு வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும். அத்தகைய விண்ணப்பதாரர்கள் அடுத்த ஆண்டு நீட் தேர்வில் கலந்துகொள்ளும் தகுதியை இழக்க நேரிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Neet Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment