மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: MBBS, PG medical seats in India increased over 2 times in 10 years: Mansukh Mandaviya shares data
தரவுகளைப் பகிர்ந்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டில் மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1,08,940 ஆகவும், முதுநிலை இடங்கள் 70,674 ஆகவும் அதிகரித்துள்ளது என்று கூறினார். 2014ல் 51,348 ஆக இருந்த நிலையில், 2014 முதல் 2024 வரை கடந்த 10 ஆண்டுகளில் 57,592 புதிய எம்.பி.பி.எஸ் இடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
முதுநிலை மருத்துவ இடங்களுக்கு, 2014 முதல் 2024 வரையிலான பத்தாண்டுகளில் 39,489 இடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
கடந்த மாதம், ராஜ்யசபாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு வழங்கும் திட்டத்தின் (சி.எஸ்.எஸ்) கீழ், 157 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் 108 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன என்று தெரிவித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ் இடங்களை உயர்த்தியுள்ளதாகவும் டாக்டர் பாரதி பிரவின் பவார் கூறினார். அரசாங்கத்தால் கிடைத்த தரவுகளின்படி, மருத்துவக் கல்லூரிகளில் 2014-க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் 2023-ல் 706 ஆக 82 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 இல் 50,000 இல் இருந்து கடந்த மாதத்தில்தான் எம்.பி.பி.எஸ் இடங்கள் 1,08,848 ஆக அதிகரித்துள்ளதாக டாக்டர் பாரதி பிரவின் பவார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“