Advertisment

10 லட்சம் மக்களுக்கு 100 எம்.பி.பி.எஸ் இடங்கள்; தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இடங்கள் என வரையறுத்த தேசிய மருத்துவ ஆணையம்; 40000 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

author-image
WebDesk
New Update
mbbs seats

10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இடங்கள் என வரையறுத்த தேசிய மருத்துவ ஆணையம்; 40000 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இளங்கலை மருத்துவ (UG) இடங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 100 என்று வரையறுத்துள்ளது. அதாவது 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 இடங்கள் என எண்ணிக்கையை வரையறுக்கும் முடிவு, சுகாதார நிபுணர்கள் கிடைப்பதில் உள்ள பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முயல்கிறது என்று NMC விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: MBBS seats in each state limited to 100 per million population: NMC

"மருத்துவ மாணவருக்கு சரியான கற்பித்தல் சூழலை வழங்குதல் மற்றும் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன், ஒவ்வொரு மாநிலத்திலும் யு.ஜி இடங்களை ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 100 ஆக வரையறுப்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.ஆர் வழிகாட்டுதல்கள் 2023 இல் சேர்க்கப்பட்டுள்ளது" என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கல்வியின் பயனுள்ள தரத்தை உறுதி செய்வதில் இது நீண்ட தூரம் செல்லும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.

இதை அறிவிக்கும் போது, ​​தேசிய மருத்துவ ஆணையம், சமீபத்திய W.P எண். 17263 கே.ஆர். வாசுதேவா எதிர் தமிழ்நாடு அரசு மற்றும் பலர் வழக்கில், 30.07.2021 அன்று மதுரை பெஞ்ச், மருத்துவக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்தது உள்ளிட்ட, உதாரணங்களை மேற்கோள் காட்டி மருத்துவக் கல்லூரிகளின் அதிக இடங்கள் குறித்து பல்வேறு நீதிமன்றங்கள் அவதானித்துள்ளன என்று மீண்டும் வலியுறுத்தியது.

இந்த விகிதத்துடன், மருத்துவக் கல்லூரிகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டால், நாட்டில் சுமார் 40,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் கூடுதலாக இருக்கும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறியது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவு இந்திய மருத்துவ சங்கத்தின் பல்வேறு மாநில கிளைகள், மாணவர் சங்கங்கள் மற்றும் பொது மருத்துவ சமூகம் ஆகியவற்றால் பாராட்டப்பட்டது. நாட்டில் மருத்துவப் பயிற்சியின் தரத்தை மேம்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் தனது முயற்சியைத் தொடரும்என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment