Advertisment

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்னும் சீட் இருக்கு; நாடு முழுவதும் 1641 காலி இடங்கள்

நாடு முழுவதும் 1641 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலி; தமிழகத்தில் 483 காலி இடங்கள்; அரசு மருத்துக் கல்லூரிகளிலும் இன்னும் காலியிடங்கள்

author-image
WebDesk
New Update
mbbs students

நாடு முழுவதும் 1641 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலி; தமிழகத்தில் 483 காலி இடங்கள்; அரசு மருத்துக் கல்லூரிகளிலும் இன்னும் காலியிடங்கள்

மத்திய அரசின் மருத்துவ ஆலோசனைக் குழுவின் (MCC) மூன்று சுற்று எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கிற்குப் பிறகும், தமிழ்நாட்டில் உள்ள 483 இடங்கள் உட்பட குறைந்தது 1,641 எம்.பி.பி.எஸ் இடங்கள் நாடு முழுவதும் காலியாக உள்ளன.

Advertisment

தேசிய அளவிலான மருத்துவ கலந்தாய்வு மற்றும் மாநில அளவிலான கலந்தாய்வுகளின் மூன்று சுற்று முடிவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 1641 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. கிட்டத்தட்ட பாதி அளவிற்கு காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களில், 59 MBBS இடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 20,000 க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 12 இடங்கள் காலியாக உள்ளன.

எம்.சி.சி.யின் சீட் மேட்ரிக்ஸின் கடைசி கட்ட காலியிட கவுன்சிலிங்கில் தமிழகத்தில் 483 இடங்களும், புதுச்சேரியில் 162 இடங்களும் மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன. மாணவர்கள் இந்தக் கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்யாவிட்டால் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ள கல்லூரிகளில் சேரவில்லை என்றால், இந்த உயர் தேவை இடங்கள் காலியாக அறிவிக்கப்படும்.

இதனையடுத்து தமிழகம் போன்ற மாநிலங்கள், செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் காலி இடங்களை மாநில கவுன்சலிங்கிற்கு வழங்க வேண்டும் அல்லது சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. அதேநேரம் தனியார் கல்வி நிறுவனங்கள் முதுகலை மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு கட் ஆஃப் மதிப்பெண்ணைக் குறைத்தது போது, இளங்கலை படிப்புகளுக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்களை 30 மதிப்பெண்கள் வரை குறைக்க மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

"மருத்துவ படிப்புகள் செலவு அதிகம் என்பது மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. மொத்தம் 872 அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களும், AIIMS, JIPMER மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற மத்திய நிறுவனங்களில் 44 இடங்களும் காலியாக உள்ளன. ஒப்பிடுகையில், காலியாக உள்ள இடங்களில் ஐந்தில் இரண்டு பங்கு அதாவது 679 இடங்கள் மட்டுமே நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ளன. மேலும் என்.ஆர்.ஐ பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவற்றில் 44 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதேநேரம் கிட்டத்தட்ட 50% காலியிடங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. கவுன்சிலிங் செயல்முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்," என்று தனியார் பயிற்சி நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

அதேநேரம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து மாநில ஒதுக்கீட்டு இடங்களும் மாநிலத் தேர்வுக் குழுவால் மூன்று சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கில் நிரப்பப்பட்டன. சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, மேலாண்மை ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ காலி இடங்களை நிரப்பும் செயல்முறை சனிக்கிழமை தொடங்கும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலங் கமிட்டிச் செயலர் டாக்டர் ஆர்.முத்துசெல்வன் தெரிவித்தார்.

கேம்பஸ் ஸ்பாட் அட்மிஷனுக்கான கட்-ஆஃப் அல்லது ரிட்டர்ன் சீட்களைக் குறைக்குமாறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசை வலியுறுத்திய நிலையில், ஐந்தில் இரண்டு பங்கு காலியிடங்களைக் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உதவித்தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளன. 250 இடங்களில் 205 இடங்கள் காலியாக உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 200 NEET மதிப்பெண்களுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்தும், 300 மதிப்பெண்களுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு 4 லட்சம் வரையிலும் உதவித்தொகையை அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Neet Mbbs Counselling Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment