Deeksha Teri
தேசிய மருத்துவ கவுன்சில் (NMC) சமீபத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்களில் மாற்றம் செய்து அறிவித்தது. தகுதி அடிப்படையிலான மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை 2023 (CBME 2023) இன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இரண்டு தாள்களைக் கொண்ட MBBS பாடங்களில் தேர்ச்சி விகிதம் 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை, மாணவர்கள் இரண்டு தாள்கள் கொண்ட பாடங்களில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மொத்த மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஆனால், புதிய வழிகாட்டுதல்கள் படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டிய தகுதி மதிப்பெண்கள் 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி ஜெயின், இறுதி ஆண்டு (2019 பேட்ச்), டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் பி.ஒய்.எல் நாயர் தொண்டு மருத்துவமனை, மும்பை
/indian-express-tamil/media/post_attachments/abc414df-71d.jpg)
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்கள் ஒட்டுமொத்த மதிப்பெண்ணைக் குறைக்கவில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற 50 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது நீடிக்கிறது. ஆனால் தியரில் தேர்ச்சி பெற இந்த 40 சதவீத அளவுகோல் செய்முறை தேர்வில் சிறந்த விளங்கும் மருத்துவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒரு டாக்டராவது என்பது புத்தகங்களிலிருந்து நீங்கள் பெற்ற அறிவை நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியது.
மேலும் இந்தியாவின் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு நமது நாடு தனது சுகாதார துறையை விரிவுபடுத்தி மருத்துவர்களை உருவாக்க வேண்டும்.
டாக்டர் ஜி கண்ணன் எம்.டி., பேராசிரியர், சேலம், தமிழ்நாடு
/indian-express-tamil/media/post_attachments/1abe6a64-64c.jpg)
ஒரு மாணவர் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால், பாடத்தில் தேர்ச்சி பெற அவர் 60 மதிப்பெண்களைக் கட்டாயம் எடுக்க வேண்டும். தியரி தேர்வுத் தாள்கள் இரண்டு வெவ்வேறு தேர்வாளர்களால் சரி செய்யப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, ஒரு தேர்வாளர் 61 ஐக் கொடுத்திருப்பார், மற்றொரு தேர்வாளர் மாணவருக்கு குறைந்தபட்சம் 59 ஐக் கொடுக்க வேண்டும், அப்போதுதான் சராசரி 60 ஆக வரும். மொத்த மதிப்பெண்கள் வேறு நபர்களால் கணக்கிடப்படும், மேலும் இதில் வரும் சராசரி தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கு மறுமதிப்பீடு எதுவும் இல்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, தற்போதுள்ள முறை சிறப்பாக உள்ளது மற்றும் புதிய வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
ஆஷிக் எஸ், முன்னாள் பொதுச் செயலாளர் ஐ.எம்.ஏ எம்.எஸ்.என், தமிழ்நாடு
/indian-express-tamil/media/post_attachments/fbf4ec30-4c8.jpg)
இந்த வழிகாட்டுதல் MBBS மாணவர்களிடையே குழப்பத்தை உருவாக்கும். MBBS பாடத்திட்டத்தில் செய்யப்படும் புதிய மற்றும் அடிக்கடி மாற்றங்கள் மாணவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தை நிச்சயமாக பாதிக்கும்.
தேர்ச்சி மதிப்பெண் தகுதியை 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கும் இந்த முறை, மாணவர்கள் எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற உதவும், ஆனால் அதற்குப் பதிலாக அறிவு அளவைக் குறைக்கும். இந்த குறைந்த தேர்ச்சி சதவீதத்துடன் மாணவர்கள் MBBS ஐ முடித்த பிறகு, NEET / NEXT, USMLE மற்றும் பிற போன்ற நிலையான போட்டி முதுகலை நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு அதிக பணம் செலுத்த வழிவகுக்கலாம்.
சுரதி என், எம்.பி.பி.எஸ் மாணவி, தமிழ்நாடு
/indian-express-tamil/media/post_attachments/3b1f969c-ef4.jpg)
புதிய வழிகாட்டுதல், MBBS மாணவர்களிடையே தேர்ச்சி மதிப்பெண்களை (தியரி மற்றும் செய்முறைத் தேர்வுகளில்) உறுதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதிக மருத்துவர்களை உருவாக்க உதவும்.
ஏற்கனவே நிறைய போட்டி நிலவுகிறது, புதிய வழிகாட்டுதல்களால் அது இப்போது அதிகரிக்கலாம். மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பணியிடங்களுக்கான போட்டியும் அதிகரிக்கும், இது சமீபத்திய பட்டதாரிகளுக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“