மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி (எம்.சி.சி.,) நீட் கவுன்சிலிங்கை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டின் நீட் கவுன்சிலிங் தேதி விரைவில் எம்சிசி தளத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
இந்நிலையில், எம்சிசி இளங்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியீட்டுள்ளது. அதில், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் போலி முகவர்கள் மற்றும் இருக்கை ஒதுக்கீடு சான்றிதழ்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
எம்சிசி ஒருபோதும் இருக்கை ஒதுக்கீடு சான்றிதழை நேரடியாக விண்ணப்பத்தாரருக்கு வழங்காது என்றும், எம்சிசி தளத்தில் தான் இருக்கை ஒதுக்கீடு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை போலியான முகவர்கள் இருக்கை ஒதுக்கீடு சான்றிதழுடன் உங்களை அணுகும் பட்சத்தில், உடனடியாக ஆலோசனை கமிட்டிக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் கவனத்திற்கு:
நீட் கலந்தாய்வில் இருக்கை ஒதுக்கீடு மாணவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையிலே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதற்கான சான்றிழதை எம்சிசி இணையதளத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
விண்ணப்பத்தாரர்கள் தங்களது லாகின் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை வெறோரு நபருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
அதே போல், எம்சிசியின் அதிகாரப்பூர்வ பக்கம் Mcc.nic.in இணையதளம் மட்டும் தான். போலியான இணையதளங்களில் நம்பி ஏமாறாதீர்கள் என ஆலோசனை கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
நீட் கவுன்சிலிங் பிராசஸ் இன்னும் தொடங்கவில்லை என்றும், மாணவர்கள் அதற்கான விவரங்களை அறிய எம்சிசியின் இணையதளத்தை அவ்வப்போது செக் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil