NEET UG 2024 Counselling: மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) இன்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) கவுன்சிலிங் சுற்று-1க்கான சாய்ஸ் ஃபில்லிங் இணையப் பக்கத்தை திறந்துள்ளது. அகில இந்திய இடங்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறையை mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: MCC NEET UG Counselling 2024: Choice filling against round 1 begins today
நீட் தேர்வு முதல் கட்ட கவுன்சிலிங்கில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 20 (இரவு 11:55 மணி)க்குள் சாய்ஸ் ஃபில்லிங் செய்து, கல்லூரிகளை உறுதிசெய்து ஆகஸ்ட் 20 மாலை 4 மணி முதல் 11.55 மணி வரை சமர்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் பல முன்னுரிமை கல்லூரிகளை நிரப்ப முடியும். இருப்பினும், தகுதியான விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் தேர்வுகளின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், சாய்ஸ்கள் முன்னுரிமை வரிசையில் இருக்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தெரிவித்துள்ளது. நீட் கவுன்சிலிங் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெற மருத்துவ ஆர்வலர்கள் ‘சாண்டேஸ்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
நீட் கவுன்சிலிங் 2024: சாய்ஸ் ஃபில்லிங் செய்வது எப்படி?
- mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
- NEET UG 2024 பதிவு இணைப்பில், நீட் தேர்வு ரோல் எண், கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்
- அடுத்த சாளரத்தில் விருப்பத்தின் வரிசையில் பாடங்கள் மற்றும் நிறுவனங்களின் சாய்ஸ்களை நிரப்பவும்
- சாய்ஸ் ஃபில்லிங் முடித்து சமர்பிக்கவும்
சுற்று 1 இட ஒதுக்கீடு முடிவு ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 24 மற்றும் 29 க்கு இடையில் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களுக்கான கவுன்சிலிங் இந்த ஆண்டு நான்கு சுற்றுகளாக நடைபெறும். சுற்று 1, சுற்று 2, சுற்று 3 மற்றும் ஆன்லைன் இறுதி காலியிட சுற்று. நீட் கவுன்சிலிங்கின் 2வது சுற்றுக்கு, பதிவு செயல்முறை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 (மதியம் 12) வரை தொடரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“