தமிழகத்தில் பொறியியல் படிக்க ஆர்வம் அதிகரித்திருந்தாலும், பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளாக உள்ளது. அதேநேரம் மெக்கானிக்கல் போன்ற கோர் படிப்புகளுக்கு எப்போதும் இருக்கும் வரவேற்பு இருந்து வருகிறது.
Advertisment
கல்வி ஆலோசகர்கள் மற்றும் தொழில் ஆலோசகர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக கூறிவருகின்றனர். இந்தநிலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய திறன் சார்ந்த படிப்புகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தனது யூடியூப் வீடியோவில், மெக்கானிக்கல் படித்து வரும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள திறன் படிப்புகள் குறித்து விளக்கியுள்ளார். அந்த வீடியோவில் மெக்கானிக்கல் படிப்புக்கு ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மின்சார வாகன தயாரிப்பு டெக்னாலஜி தொடர்பாக ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துக் கிடக்கின்றன. எனவே இந்த துறையில் வேலை பெற வேண்டியவர்கள், அட்வான்ஸ்டு மேட்லேப், சென்சர் ப்யூசன், அல்ட்ரா கெப்பாசிடர், பேட்டரி மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ், பேட்டரி மாடுயூல் சிஸ்டம்ஸ் டிசைன் போன்றவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டோமெடிக் வாகனங்கள் துறையில் வேலை பெற நினைப்பவர்கள், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர் ப்ரேம் ஒர்க் தொடர்பான RESSET, YOLO, பைதான், மெசின் லேர்னிங், டீப் லேர்னிங் போன்ற திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
மெக்கானிக்கல் துறையில் எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பை பெற பொறியியல் பாடத்திட்டத்தை தாண்டி, இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்வது சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“