சென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்!

சென்னை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற சென்னையில் கால்பதிக்கிறது.

சென்னை பள்ளி மாணவர்களை ஊக்விக்கும் வகையில் பிரபல கல்வி நிறுவனமான மெலுஹா ரு.2.2 கோடி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.

மெலுஹா நிறுவனம் 2.2 கோடி :

ஜே.இ.இ.மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள் குறித்த பயம் மாணவர்களிடம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த பயத்தை போக்கி மாணவர்களுக்கு தனித்துவமான பயற்சி அளித்து வருகிறது மெலுஹா நிறுவனம். ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த கல்வி நிறுவனம், தற்போது தமிழகத்தில் கால்பதிக்க வருகிறது.

இந்த நிறுவனம், புதியதொரு முயற்சிகாக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வதில் மெலுஹா டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் எனப்படும் ஐ.ஐ.டி.-யில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. மற்றும் மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் போன்றவற்றில் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வரும் இந்த நிறுவனம் தற்போது சென்னை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற சென்னையில் கால்பதிக்கிறது.

பயிற்சி முறை:

இந்த நிறுவனம் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சி சற்று வித்யாசனமானது. ஒன்று கையடக்க கணினி (TABS) வழியாக ஆன்லைன் பயிற்சி. மற்றொன்று சிறப்பான ஆசிரியர்கள் மூலம் நேரடி பயிற்சி. இதே முறையான பயிற்சி தான் தற்போது சென்னை மாணவர்களுக்கும் அளிக்க மெலுஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலமாக வழங்கும் பயிற்சி முறையிலும் (B2B), தனிப்பட்ட முறையில் நேரடியாக மாணவர்களை எட்டும் (B2C) முறையிலும் இந்நிறுவனம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தனது பாடத் திட்டங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மெலுஹாவின் பயிற்சி முறை (ஓராண்டுக்கான பயிற்சி முறைக்கு ரூ.15,000 கட்டணம்) மாணவர்களின் மனப் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்து, அவர்களைத் தீவிரமாக யோசிக்கத் தூண்டும். அதனால், அவர்களது உள்ளார்ந்த தேடல் அதிகரித்து, மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் பெறுவார்கள். இது ‘ஜே.இ.இ.’ மற்றும் ‘நீட்’ போன்ற எந்த நுழைவுத் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ள, மாணவர்களை தயார் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

வளர்ச்சி விகிதம்:

2014-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கியது முதலே, மெலுஹா மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டு இறுதியில் இது, தனது பயிற்சி மாணவர் எண்ணிக்கையில் 3 லட்சம் என்ற இலக்கைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் 4 ஆயிரம் வகுப்பறைகளில் இந்த நிறுவனத்தின் பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இது, சுமார் 50 ஆயிரம் மாணவர்களை தனது அரவணைப்புக்குள் கொண்டு என்ற பிரம்மாண்ட எதிர்பார்ப்பு மேலூங்கியுள்ளது.

சென்னை மாணவர்களுக்கு 2.2 கோடி:

தமிழகத்தில்   தொடங்கவுள்ள மெலுஹா நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை நேரடி பயனாளர்கள் முறையே  தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ. 2.20 கோடி மதிப்புள்ள கல்வி உதவித் தொகையை சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மெலுஹா நிறுவனம் அறிவித்துள்ளது.   இந்த அறிவிப்பை  மெலுஹா தமிழகக் கிளையின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனராமான திரு. ராம் என் ராமமூர்த்தி தெரிவித்தார்.  மேலும் பேசிய அவர், ”இந்த கல்வி உதவித் தொகை மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட்டு, தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும். மெலுஹா பயிற்சித் திட்டத்திற்கான கட்டணத்தில் 100% மற்றும் 60% சலுகை என இரு வாய்ப்புகள் மாணவர்களுக்குத் தரப்பட உள்ளன” என்று கூறினார்.

யார் யார் பெற முடியும்?

தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக சென்னையில் உள்ள பள்ளிகளில்  தகுதி/திறன் வேட்டை நிகழ்ச்சி ஒன்று மெலுஹா நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ளது. “இளம் சாதனையாளர்கள் 2018” (YOUNG ACHIEVERS 2018) என்ற நிகழ்ச்சி  மூலம் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவோர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு,அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதோடு, கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது.

அதே போல் இதில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு,  மெலுஹா நிறுவனத்தின் பயிற்சி வகுப்பில் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

இதுக்குறித்து பேசிய மெலுஹா நிறுவனத்தின் இயக்குனரான  திரு. அபிலேக் புட்டகுண்டா , ஜே.இ.இ.’ மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான எங்களது பாடங்களை தமிழக மாணவர்களிடையே வினியோகம் செய்யும் காரியத்தில் இறங்க உள்ளோம்” எனத் தெரிவித்தார். “எங்களது கல்வி நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற அடியெடுத்து வைத்துள்ளது. எங்களது திட்டங்களை,  பொருட்களை தமிழகத்தில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கற்பது என்றால் என்ன என்பதற்கே புதிய வரையறைகளை மெலுஹா அளிக்கத் தொடங்கியுள்ளது. அதோடு கூடவே, ஆயிரக்கணக்கான மாணவர்களை பள்ளிக் கல்வி சார்ந்த பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற வைத்துள்ளது.

நீட் தேர்வைப் பொறுத்தவரை எங்களது மாணவர்கள் 99 சதவீதமும், ஜே.இ.இ. தேர்வைப் பொறுத்தவரை, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்களிலேயே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் உள்ளனர். அதோடு, இந்த மாணவர்கள் தங்களது பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலும் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு: www.meluhaTN.com என்ற இணையத்தளத்தையோ அல்லது 73977 59307 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close