scorecardresearch

அண்ணா நூற்றாண்டு நூலகம் : உறுப்பினர் ஆவது எப்படி ?

பயனர்களுக்கு , அண்ணா நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வீட்டிற்க்கு கடன் வாங்கி செல்லும் வசதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.     

library

சென்னை கோட்டூர்புரத்தில் ஒன்பது தளங்களோடு இயங்கி வருகிறது அண்ணா நூற்றாண்டு நூலகம் . எந்த நேரத்திலும் 1250 பயனர்கள் பயன்படுத்தும் அளவிற்கு பிரமான்டமான  நூலகம். இந்நூலகம் தொடர்பாக, பொது மக்கள்  நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி  ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,  அண்ணா நூலகத்தில் பொது மக்கள் உறுப்பினராகம் செயல்முறையைத் தொடங்கியுள்ளது அந்நூலக நிர்வாகம்.

நூலகத்தில், முதல் முறை (பர்ஸ்ட் டைம்) உறுப்பினர்க் கட்டணங்கள் பின்வருமாறு :

தனிநபர்களாக இருந்தால் ரூ .250  ,  ஒரு குடும்பத்திற்கு ( இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் சேர்த்தது ) ரூ.  500 , மூத்த குடிமகன் என்ற பிரிவுகளுக்கு ரூ.100, மாணவர்களுக்கு – ரூ. 150 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

உறுப்பினர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருக்கும் சொந்த நூல் பிரிவு, இ.புக்ஸ், இ-நூலகம், நூலகத்தின் ஒய்-ஃபை போன்றவைகளை அனுபவிக்கலாம்.  ஒய்-ஃபை வசதிக்கான வேலைகள் தற்போது நடந்துவருவதாகவும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு , அண்ணா நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வீட்டிற்க்கு கடன் வாங்கி செல்லும் வசதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணா நூலகத்தில் எப்படி உறுப்பினராக வேண்டும்.  

அண்ணா நூற்றாண்டு நூலகம் உறுப்பினர்    என்ற இந்த இணையதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்யுங்கள். விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்பு , படிவத்தில் உங்களது போட்டோவை ஒட்டி, அங்கிகரிக்கப்பட்ட அடையாள எண் நகலை இணைத்து நூலகத்தின் நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் – தமிழ்

விண்ணப்ப படிவம் – English

அண்ணா நூற்றாண்டு நூலகம் 2008ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2010 ம் ஆண்டு  பொது மக்களின் வசதிக்காக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Membership started at anna centenary library membership facilities in anna library

Best of Express