இந்திய உளவுத்துறை பணியகத்தில் இளநிலை புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் இளநிலை புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) (JUNIOR INTELLIGENCE OFFICER GRADE – II/TECHNICAL) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 797 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!
JUNIOR INTELLIGENCE OFFICER GRADE – II/TECHNICAL
காலியிடங்களின் எண்ணிக்கை : 797
கல்வித் தகுதி : Diploma in Electronics/ Electronics & Tele-communication/ Electronics & Communication/ Electrical & Electronics/ Information Technology/ Computer Science/ Computer Engineering/ Computer Applications அல்லது Bachelor’s Degree in Science with Electronics or Computer Science or Physics or Mathematics அல்லது Bachelor’s Degree in Computer Applications படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 25,500 - 81,100
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/83923//Index.html என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.06.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1114557631104219771498.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.