/indian-express-tamil/media/media_files/2025/07/15/ib-jobs-2025-07-15-17-13-05.jpg)
இந்திய உளவுத்துறை பணியகத்தில் இளநிலை புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் இளநிலை புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) (JUNIOR INTELLIGENCE OFFICER GRADE – II/TECHNICAL) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
JUNIOR INTELLIGENCE OFFICER GRADE – II/ TECHNICAL
காலியிடங்களின் எண்ணிக்கை: 394
கல்வித் தகுதி: Diploma in Electronics/ Electronics & Tele-communication/ Electronics & Communication/ Electrical & Electronics/ Information Technology/ Computer Science/ Computer Engineering/ Computer Applications அல்லது Bachelor’s Degree in Science with Electronics or Computer Science or Physics or Mathematics அல்லது Bachelor’s Degree in Computer Applications படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி (SC/ ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 25,500 - 81,100
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/en என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.09.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.