மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 1.30 லட்சம் கான்ஸ்டபிள்களை நியமிக்க உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது, இதில் அக்னிவீரர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அறிவிப்பின்படி, பொது மத்தியப் பணி, குரூப் ‘சி’, அரசிதழ் அல்லாத படைவீரர், (அமைச்சுப் பணி அல்லாத போர்வீரர்) என மொத்தம் 1,29,929 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, அவற்றில் 1,25,262 ஆண்களும், 4667 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் ரூ.21,700 முதல் 69,100 வரை இருக்கும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!
"முன்னாள் அக்னிவீரர்களின் முதல் தொகுதிக்கு, அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் வரை தளர்த்தப்படும் மற்றும் முன்னாள் அக்னிவீரர்களின் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் வரை தளர்த்தப்படும். அனைத்து முன்னாள் அக்னிவீரர்களுக்கும் உடல் திறன் தேர்வில் (PET) இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு (மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CRPF க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடல் மற்றும் மருத்துவத் தரநிலைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil