சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுனர், பன்முக உதவியாளர், கட்டளை நிறைவேற்றுனர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
நகல் பரிசோதகர் – 60
நகல் வாசிப்பாளர் – 11
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 242
கட்டளை எழுத்தர் – 1
ஒளிப்பட நகல் எடுப்பவர் – 53
ஓட்டுநர் – 27
நகல் பிரிவு உதவியாளர் – 16
அலுவலக உதவியாளர் – 638
தூய்மை பணியாளர் – 202
தோட்டப் பணியாளர் – 12
காவலர்/ இரவுக் காவலர் – 459
இரவுக் காவலர் – மசால்ஜி – 85
காவலர் – மசால்ஜி – 18
துப்புரவு பணியாளர் – மசால்ஜி – 1
வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் – 2
மசால்ஜி - 402
கல்வித் தகுதி
நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கூடுதலாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
நகல் பிரிவு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், இரவுக் காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர், வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி
01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்
நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு – ரூ. 19,500 – 71,900
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு – ரூ. 19,000 – 69,900
கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் பணியிடங்களுக்கு – ரூ. 16,600 – 60,800
நகல் பிரிவு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், இரவுக் காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர், வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் பணியிடங்களுக்கு – ரூ. 15,700 – 58,100
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.05.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ 500, எஸ்.சி, எஸ்.சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“