இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான 20% பிரத்தியோக இடங்கள், உயர் வகுப்பினருக்கான் 10% இடஒதுக்கீடு போன்றவைகளால் இந்த ஆண்டு கூடுதல் மாணவர்கள் சேர்க்கை எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தங்கள் வகுப்பறை மற்றும் விடுதிகளை புதுபித்துக் கொண்டிருந்தன. இதற்கிடையே,கொரோனா பொது முடக்கநிலை காரணமாக காடுமானப் பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் போது இந்த பணிகளை முடிக்க வாய்ப்பில்லை. இதனால், 2021- ம் ஆண்டுக்குள் 10% இடஒதுக்கீடு வழங்கப் படவேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் கூட்டாக, கடந்த மாதம் மத்திய அரசை அணுகியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு 2021ம் ஆண்டு கால வரம்பிற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 2019ம் ஆண்டு ஜனவரி 17 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட நிர்வாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டது . ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.எஸ்.இ.ஆர், ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும், இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்களின் மாணவர்கள் சேர்க்கையை 25% அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
10% இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த, இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் கூட்டாக சுமார் 6,700 இடங்களை அதிகரிக்க வேண்டும். இதில், ஏறக்குறைய 2,300 இடங்கள்( பி.டெக் படிப்பில் 500 இடங்கள்) 2019-20 இல் சேர்க்கப்பட்டன. மீதமுள்ள 4,400 இடங்கள் பிடெக்-படிப்பிற்கு 1,300 இடங்கள்) இந்த ஆண்டு சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இளங்கலை மாணவர்களுக்கான, அடுத்த செமஸ்டர் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமிருப்பதாக ஐ.ஐ.டி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.