/indian-express-tamil/media/media_files/X3EgZSO4UoKgFEqO32Mo.jpg)
12ஆம் வகுப்பு தேர்வை தொடர்ந்து மாணவ மாணவியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் தொகுப்புகள் வழங்கினார்,
Minister Anbil Mahesh | 12th class examination | தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடங்கிய தொகுப்பினை திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் அமைச்சர் வழங்கிய தொகுப்பினை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.