scorecardresearch

மழை விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – அன்பில் மகேஷ்

மழையால் விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை சரிகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை

மழை விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – அன்பில் மகேஷ்

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

கனமழை பெய்யும் நாட்களிலும், வானிலை ஆய்வு மையத்தால் கனமழை எச்சரிக்கை விடப்படும் நாட்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். மிக கனமழையைத் தவிர, கல்லூரிகளுக்கு பெரும்பாலும் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. ஆனால், குழந்தைகளை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: JEE Exam; ஜே.இ.இ தேர்வு 2023; தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் இறுதி வரை பெய்யும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்தப் பருவமழையில் அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இந்தநிலையில், இந்த மழை காரணமான விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை சரிகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Minister anbil mahesh says school works on saturday for compensation of rain leaves