மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்ள தமிழக அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான பொதுத்தெர்வு அட்டவணையை இன்றைய தினம் (14.10.2024) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியில் முதல் தவணையான ரூ. 573 கோடியை மாநில அரசு வழங்கவில்லை எனக் கூறினார். இதனால், 32 ஆயிரத்து 298 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை மாநில நிதியில் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், 27 வகையான பயன்பாடுகள் மத்திய அரசு நிதியை சார்ந்து இருப்பதாக கூறிய அமைச்சர், பல்வேறு காரணங்களைக் கூறி நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தார். குறிப்பாக, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு அழுத்தம் தருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“