Advertisment

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

author-image
WebDesk
New Update
Minister Ma Subramanian release MBBS and BDS ranking list, MBBS ranking list, BDS ranking list, எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு, எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு, பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு, மா சுப்பிரமணியன், Tamilnadu, MBBS, BDS, Medical ranking list

தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

Advertisment

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பா் 19ம் தேதி தொடங்கி கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது.

அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களில் 1,930 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% ஒதுக்கிட்டின்படி மொத்தம் 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

பட்டியலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல் 10 இடம் பிடித்த மாணவர்களின் பட்டியலை வாசித்தார். அதன்படி, நாமக்கல் கீதாஞ்சலி 710; நாமக்கல் பிரவீன் 710; திருவள்ளூர் பிரசன் ஜித்தன் 710; சென்னை நயகிரிவாஸ் 705; சேலம் ஹர்சிதா 705; தூத்தூக்குடி கரன் 705; சேலம் மணிமாறன் 697 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சுயநிதி ஒதுக்கீட்டின் கீழ், திருப்பூர் கவிநேஷ் 710 ஆகியவர்கள் பட்டியலில் வரிசைப்படி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அதே நேரத்தில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 27ம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது.

ஜனவரி 28, 29ம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன் பின்னா், 30ம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, பொது இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Mbbs Counselling Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment