scorecardresearch

MBBS Counselling 2022; மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை வெளியீடு; மதுரை மாணவர் முதலிடம்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; மதுரை மாணவர் முதலிடம்

MBBS Counselling 2022; மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை வெளியீடு; மதுரை மாணவர் முதலிடம்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர்க்கை பெற நடத்தப்படும் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆரம்பமானது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: பழநி முருகன் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இதனையடுத்து ஆன்லைனில் 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து, இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் இன்று (அக்டோபர் 17) வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் துவங்குகிறது. 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக 2695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 454 எம்பிபிஎஸ் இடங்களும் 104 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் 558 இடங்களுக்கு அக்டோபர் 20 ஆம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

வரும் அக்டோபர் 19 ஆம் தேதி விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

வரும் அக்டோபர் 30 ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் நவம்பர் 4 ஆம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். இதையடுத்து, முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15 ஆம் தேதி துவங்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த திரிதேவ் 705 மதிப்பெண் எடுத்து, முதலிடம் பிடித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Minister ma subramanian releases mbbs bds counseling rank list

Best of Express