நீட் என்பது இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் B.V.Sc மற்றும் AH கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வாகும். இந்தாண்டு, நீட் தேர்வ செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. தேசிய தேர்வுகள் முகமை, விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு, என்டிஏ தளத்தில் ஆன்சர் கீ பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் அதனை உபயோகித்து உத்தேச மதிப்பெண்ணைக் கணக்கிட முடியும். கட்ஆஃப் மார்க் மூலம் கவுன்சிலிங்கில் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
கடந்தாண்டு பார்க்கையில், டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி ஆகியவை நீட்டில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விருப்பமாக இருந்தது. நீட் தேர்வில் எடுத்த கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள்.
கடந்தாண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் 200 மாணவர்கள், எந்த கல்லூரிகளை தேர்வு செய்தார்கள் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்
கடந்தாண்டு, மொத்தம் 13,66,945 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர், அவர்களில் 7,71,500 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இந்தாண்டு, தேர்வெழுத விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது . சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளதால், கவுன்சிலிங்கில் கடுமையான போட்டி இருக்கலாம் என கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எம்சிசி பகிர்ந்த தரவுகளின்படி, கடந்தாண்டு நீட்டில் தேர்ச்சி பெற்ற முதல் 200 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- எய்ம்ஸ், டெல்லி
- ஜிப்மர், புதுச்சேரி
- பிஜே அரசு மருத்துவக் கல்லூரி, புனே
- மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டெல்லி
- அரசு மருத்துவக் கல்லூரி, கோட்டா
- சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவக் கல்லூரி, ஜெய்ப்பூர்
- அரசு மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்
- VMMC மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி
- சேத் ஜிஎஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை
- எய்ம்ஸ், ஜோத்பூர்
- எய்ம்ஸ், போபால்
- லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, டெல்லி
- பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரி (UCMS), டெல்லி
- மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
- ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை
- பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட்
- எய்ம்ஸ், பிபிநகர்
நீட் தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.