சீனாவில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் தேர்ச்சி பெறுவதில்லை.. ஷாக் ரிப்போர்ட்!

உலக நாடுகளில் மருத்துவ பட்டம் முடித்த மாணவர்களில் 15 சதவீத ( 8,764) பேர் மட்டுமே  எஃப்எம்ஜிஇ  தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராகும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

By: Updated: October 6, 2020, 02:33:41 PM

சவுமிய அசோக்

நமது நாட்டில் மருத்துவப் படிப்பில் இருக்கும் கடும் போட்டி காரணமாக, மற்ற நாடுகளில் சென்று, இந்திய மாணவர்கள் மருத்துவப்படிப்பை தொடர்கின்றனர் . வெளிநாடுகளில் பட்டம் பெற்ற பிறகு , இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்றால் தேசிய தேர்வு வாரியம்  நடத்தும் வெளிநாடு மருத்துவப் பட்ட தேர்வு ( எஃப்எம்ஜிஇ) என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய தேர்வு வாரியம் , கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் எத்தனை பேர் எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிராற்கள் என்ற புள்ளிவிவரங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.

 

இந்த மூன்றாண்டில் மட்டும்  61,708 இந்திய மாணவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டம் முடித்துள்ளனர். 15 சதவீத ( 8,764) மாணவர்கள் மட்டுமே  எஃப்எம்ஜிஇ  தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியாவில் மருத்துவராகும் தகுதியை அடைந்துள்ளனர்.

இதில் குறிப்பாக, சீனாவில் பட்டம் பெற்ற மாணவர்கள், எஃப்எம்ஜிஇ தேர்வின் தேர்ச்சி விகிதம் இன்னும் குறைவாக இருக்கிறது. உதரணாமாக, இந்த மூன்றாண்டில்  சீனா வில் இருக்கும் 86 மருத்துவ பல்கலைக்கழகம்/கல்லூரிகளில்  20,310 இந்தியா மாணவர்கள் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளனர் . இதில் 11.67 சதவீத (2,369 ) மாணவர்கள் மட்டுமே எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியாழ்ளிபதாக உள்ளது.

இந்த கல்வியாண்டில் மட்டும் , சீனா முழுவதும் உள்ள இந்தியா மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட 45 மருத்துவ பல்கலைக்கழகங்களில், 3,370 மாணவர்கள் படித்திருக்கின்றனர். இருப்பினும், தோராயமாக சீனாவில் உள்ள 214 மருத்தவ பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம்  படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட 45 பல்கலைகழகத்தில் படித்தால் மட்டும் ஆங்கில மொழியில் மருத்தவ படிப்பு பெற்றவர்கள் என்று கருதப்படும். இதைத் தாண்டியுள்ள மற்ற பல்கலைகளங்களில் படித்தால்  அவர்களுக்கு சீனா மொழியில் மட்டும் பாடம் கற்பிக்கப்படும்.  சீனா மொழியில் மருத்துவ பட்டம் பெற்றவர் என்றே கருதப்படுவர்

தென் இந்தியாவில் இருந்து  பல மாணவர்களை ஈர்க்கும் வுஹான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில்  10 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை  அடைந்துள்ளனர். ஜின்ஜோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகப்படியான 28.93 சதவீதத்துடன் உள்ளது.

டெல்லியில் அமைந்திருக்கும் தி இன்ஸ்டியுட் ஆப் சைனீஸ் ஸ்டடிஸ்ன் உதவி இயக்குனர்  மாதுரிமா நண்டி இது குறித்து தெரிவிக்கையில் ” நிறைய மாணவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வு  கடினமாக இருப்பதாக கருதுகின்றனர். ஒருவேளை இந்தியாவின் மருத்துவ பல்கலைக்கழகங்களில் படித்திருந்தால் இவர்களுக்கு இந்த தேர்வு  எளிமையானதாக  இருந்திருக்கும். எஃப்எம்ஜிஇ  தேர்வு தரம் இந்தியா பாடத் திட்டங்களோடு நன்கு ஒத்திப் போகிறது.

சீனாவில் இன்னும் விரிவான நடைமுறை பயிற்சியும் , மாணவர்களின் இன்டர்ன்ஷிப் காலங்கள் நன்கு பயனுள்ளதாக ஆக்கப்பட்டால் எஃப்எம்ஜிஇ தேர்வை எளிதாக தேர்வடைய முடியும் என்று மாணவர்கள் கருதுவதாக” கூறினார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில் , ” சீனா மருத்துவ பல்கலைக் கழகங்களின் தரங்களும், அதி படித்து வெளியேறும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை நினைக்கும் பொழுது  இரு  நாட்டு அரசாங்கத்திற்கு  கவலை அளிப்பதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Most indian students with chinese medical degree failed in fmge eligibity test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X