தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.29 லட்சம் ஆகும். கடந்த 1-ம் தேதி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 13.59 லட்சம்.
இந்த தேர்வில் ஒரு குறிப்பிட்ட கேள்வி தற்போது சமூக வலைத் தளங்களில் பிரபலமாகி வருகின்றது. அக்கேள்வியையும் அதற்க்கான பதிலையும் கீழே காண்போம்.
கேட்கப்பட்ட கேள்வி : “கிரிக்கெட் வீரர் தோனி முதல் 30 போட்டிகளில் தனது சராசரியை 72 ரன்கள் என்ற கணக்கில் வைத்திருக்கிறார். 31 வது போட்டிக்கி பின், அவரது சராசரி 73 ரன்கள் என்ற கணக்கில் உயர்த்தப்படுகிறது .
அப்படியானால் 31 வது போட்டியில் அவர் எத்தனை ரன்கள் எடுத்தார்? ”.
இக்கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு சாய்ஸ்கள்:
(ஏ) 100
(பி) 103
(சி) 74
(டி) 108.
இக்கேள்வி, தேர்வர்கள் முதலில் வினாத்தாளில் பார்க்கும் பொழுது சற்று வித்தியாசமாகவே நினைத்தனர். தேர்வ முடிந்ததும் சமூக வலைத் தளங்களில் இக்கேள்விக்கான பதில்களும், மீம்ஸ்களும் அதிகமாகவே தென்பட்டன.
பதிலை நாம் எப்படி யோசிக்க வேண்டும்:
முதல் 30 போட்டிகளில் தோனியின் சராசரி 72 ரன்கள். அதாவது, ஒவ்வொரு போட்டியிலும் அவர் 72 பெற்றுள்ளார் என்பதே இதன் பொருள். எனவே 30 ஐ 72 ஆல் பெருக்கும்போது 2160 கிடைக்கும். அதாவது தோனி தனது முதல் 30 போட்டிகளில் 2160 ரன்கள் எடுத்துள்ளார்.
31 போட்டிகளுக்குப் பிறகு அவரது சராசரி 73 என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனவே இப்போது 73 ஐ 31 ஆல் பெருக்கினால் 2263 என்ற ரன்கள் கிடைக்கும். அதாவது தோனி தற்போது முதல் 31 போட்டிகளில் 2263 ரன்கள் எடுத்துள்ளார்.
எனவே, எம்.எஸ்.தோனி தனது 31 வது போட்டியில் 103(2263-2160 ) ரன்கள் எடுத்தார்.
எனவே, இதற்கு சாய்ஸ் பி என்பதே சரியானதாக இருக்கும்
எதார்த்தமாய்க் கேட்ட கேள்வியா? அல்லது தேர்வர்களின் மன உளைச்சலை குறைப்பதற்காகவும், தன்நம்பிக்கையை அதிகப் படுத்துவதற்காகவும் கேட்ட கேள்வியா? என்று யோச்கிகவும் வைக்கின்றது
டிஎன்பிஎஸ்சி இந்த முயற்சி வருங்காலத்தில் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை நாம் பொருத்து இருந்ததான் பார்க்க வேண்டும்.