தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து மும்பை தாராவியில் தமிழ் வழி பயிலும் 10 ம் வகுப்பு குழந்தைகளுக்குத் தேர்வு ரத்து அனைவரும் தேர்ச்சி உத்தரவு பொருந்தாது எனக் கூறுவது பாரபட்சமானது என்று மு.ஹி.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து மும்பை தாராவியில் தமிழ் வழி பயிலும் 10 ம் வகுப்பு குழந்தைகளுக்குத் தேர்வு ரத்து அனைவரும் தேர்ச்சி உத்தரவு பொருந்தாது என்பது பாரபட்சமானது. தமிழக அரசு மும்பை தமிழ் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும். @CMOTamilNadu pic.twitter.com/ptqrZJPHAj
— Jawahirullah MH (@jawahirullah_MH) June 22, 2020
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 வரையிலும், அதே போல 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. அதே போல, 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளையும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,"தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டது
இருப்பினும், பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். அதற்கான மாற்று தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக கல்வித் துறை அமைச்சார் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
மஹாராஷ்ட்ர மாநிலம் மும்மை தாராவி மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழும் தமிழ் மக்கள் அங்குள்ள தமிழ் பள்ளிகள் பயின்று வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாராவியில் படிக்கும் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு தமிழக கல்வித்துறை பொதுத் தேர்வை நடத்தி வருகிறது. எனினும், தாராவி மாணவர்களை தனித்தேர்வர்கள் என்று தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.
கொரோனாவால் தமிழகத்தை விட அதிகப் பாதிப்படைந்த மாநிலாமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. எனவே, தமிழக மும்பை தமிழ் மாணவர்களின் மனநிலையம் புரிந்து கொண்டு செயல் படவேண்டும் என்றும், மும்பை தமிழ் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என மு.ஹி.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.