New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/nabard.jpg)
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு; 102 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
நபார்டு வங்கியில் அசிஸ்டண்ட் மேனேஜர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 102 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு 15.08.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 102
General - 50
Chartered Accountant - 4
Finance - 7
Computer/ Information Technology - 16
Agriculture - 2
Animal Husbandry - 2
Fisheries - 1
Food Processing - 1
Forestry - 2
Plantation & Horticulture - 1
Geo Informatics - 1
Development Management - 3
Statistics - 2
Civil Engineering - 3
Electrical Engineering - 1
Environmental Engineering/Science - 2
Human Resource Management - 2
AM (Rajbhasha) - 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.
சம்பளம்: தோராயமாக ரூ. 1,00,000
தேர்வு முறை: இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.850 ஆக உள்ளது. எஸ்.சி/எஸ்.டி மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nabard.org/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.