நபார்டு வங்கியில் மேனேஜர் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பதவிகளுக்கு 162 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடையும். ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nabard.org இல் விண்ணப்பிக்கலாம்.
நபார்டு ஆட்சேர்ப்பு 2021: காலியிடங்கள்
உதவி மேலாளர் (ஊரக வளர்ச்சி வங்கி சேவை): 148
தரம் A (ராஜ்பாஷா சேவை) உதவி மேலாளர்: 5
தரம் A (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு சேவை) உதவி மேலாளர்: 2
தரம் ‘பி’ (ஊரக வளர்ச்சி வங்கி சேவை) மேலாளர்: 7
நபார்டு ஆட்சேர்ப்பு 2021: தகுதிகள்
தகுதிகள்:
வயதுத் தகுதி:
விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
கல்வித் தகுதி:
தரம் A இல் உதவி மேலாளர்: விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி / எஸ்.டி / பி.டபிள்யூ.டி விண்ணப்பதார்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி / எஸ்.டி / பி.டபிள்யூ.டி விண்ணப்பதார்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்) அல்லது பி.எச்.டி.
தரம் B இல் மேலாளர்: விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி / எஸ்.டி / பி.டபிள்யூ.டி விண்ணப்பதார்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி / எஸ்.டி / பி.டபிள்யூ.டி விண்ணப்பதார்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்) அல்லது பி.எச்.டி.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.900 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு ரூ.150 ஆக உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதலாவது முதல்நிலை தேர்வுகள், அதன்பின் மெயின்ஸ் தேர்வு மற்றும் கடைசி கட்டம் நேர்முகத் தேர்வு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.