Nasscom Partners with IIT Madras : ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து மாணவர்களின் திறன் வளர்க்கும் பயிற்சிகளில் ஈடுபட உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சார்புடையக் தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் புதிதாகப் பணியில் இணைந்துள்ள ஊழியர்களின் திறனை வளர்க்க ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோத்துள்ளது நாஸ்காம். தகவல் தொழில்நுட்ப உலகில் திறன் உடையோர்களை உருவாக்க வேண்டிய இப்புதிய திறன் வளர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
Nasscom Partners with IIT Madras : ஐஐடி - நாஸ்காம் இணைப்பு
நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாஸ்காம், தகவல் தொழில்நுட்ப உலகில் இணையும் மாணவர்கள், புதிய பணியாளர்கள், இத்துறை சார்ந்த அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் இத்தொழில்நுட்ப உலகில் தேவைப்படும் அனைத்துத் திறன்களையும் மேம்படுத்தும் வகையில் ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. டிஜிட்டல் திறன்கள் இன்றைய உலகின் முக்கியத் தேவையாக உள்ளது. 4 மில்லியன் மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
தகவல்தொழில்நுட்ப திறன் வளர் கவுன்சில் சிஇஓ ஆன அமித் அகர்வால் கூறுகையில், “வருங்கால திறன்வளர் பயிற்சி மிகவும் முக்கியத் தேவையாக உள்ளது. புதிய தொழில்நுடபங்கள் வளர்ந்து வரும் வேளையில் இந்தியாவும் அப்புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் தொழில்நுட்பம் துறையில் தகுதியான திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமித் தெரிவித்தார்.