திருச்சி அரசுப் போக்குவரத்து வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க!

இயந்திரவியல், தானியங்கிவியலில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தோருக்கு ஓராண்டுக்கான தொழில் பழகுநா் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

National Apprenticeship Training Scheme (NATS) என்பது இந்திய அரசின் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் வழங்கும் ஓராண்டு பயிற்சி திட்டமாகும். இது தொழில்நுட்பக் கல்வித்தகுதி பெற்ற இளைஞர்களுக்கு அவர்களது பணிப்புலத்தில் (பாடப்பிரிவில்) தேவைப்படும் செய்முறை அறிவும் திறனும் அளிப்பதற்கான ஓராண்டுத் திட்டமாகும்.

தொழில் பழகுநர்கள் தொழில் நிறுவனங்களால் அவர்களின் பணியிடத்திலேயே பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பயிற்சி பெற்ற மேலாளர்கள், சிறப்பாக தயாரிக்கப்பட்ட பயிற்சிக் கட்டகங்களின் (well developed training modules) உதவியுடன் பயிற்சியளித்துத் தொழில் பழகுநர்கள் வேலையை விரைவாகவும் திறமையுடன் செய்யக் கற்றுக்கொள்வதை உறுதி செய்கிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கிளை சார்பில், தென்மண்டலத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதையடுத்து, இயந்திரவியல், தானியங்கிவியலில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தோருக்கு ஓராண்டுக்கான தொழில் பழகுநா் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபா்கள் http://www.boat.srp.com என்ற இணையத்தின் மூலமாக தகவல்களை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அக்டோபர் 16ஆம் தேதிக்குள் இணையத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பில் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பட்டம், பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: National apprenticeship training scheme for trichy youngsters

Next Story
நீட் தேர்வு: கட் ஆஃப் கணக்கீடு, ஆன்சர் கீ டவுன்லோட் முறை தெரிஞ்சுக்கோங்க!neet
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com